Search

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Tuesday 28 January 2020

ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் அடிப்படையில் இந்த நிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது .

மேற்கூறப்பட்ட தொகையானது கீழ்க்காணும் கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும் .

2202 General Education - 02 Secondary Education - 107 Scholarships - State ' s Expenditure - AA National Scholarships at the secondary stage For Talented Children From Rural Areas - 312 Scholarship and Stipends - 09 others

New IFHRMS DP code - ( 2202 - 02 - 107 - AA 31209 )

Old DP code - ( 2202 - 02 - 107 - AA 1290 )

மேற்காணும் படிப்புதவித் தொகை 9 , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொடர்ந்து பயில்வதற்காக மட்டுமே ஒவ்வொறு மாணவ / மாணவிக்கும் ரூ . 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) வீதம் காசோலையாக வழங்கப்பட வேண்டுமென அரசாணை எண் . 960 பள்ளிக் கல்வித்துறை ( இ2 ) நாள் 11 . 10 . 1991 - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு தற்போது ரூ . 1 , 00 , 000 / - என பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ . 12 , 000 / - லிருந்து ரூ . 1 , 00 , 000 / - வரை உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் கிராமப்புறத்தைவிட்டு நகர்புறத்திற்கு சென்றலோ , மதிப்பெண் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலோ அல்லது பாலிடெக்னிக் கல்லூரி போன்ற பிற கல்வி நிலையங்களுக்குப் பயிலச் சென்று விட்டாலோ அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது . உதவித் தொகை 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் . மேற்காணும் படிப்பு உதவித் தொகை 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு மட்டுமே அரசாணை எண் . 960 கல்வித்துறை நாள் 11 . 10 . 1991 - ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One