Search

BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு - ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?

Tuesday 11 February 2020


ஆசிரியர் தேர்வு வாரியம் ,
சென்னை - 600 006

பத்திரிக்கைச் செய்தி

 2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது .
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in - ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது .

இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது . தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card - ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது .
தேர்வு தேதி - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் 14 . 02 . 2020 - 10 . 02 . 2020 15 . 02 . 2020 - 11 . 02 . 2020 16 . 02 . 2020 - 12 . 02 . 2020 நாள் : 10 . 02 . 2020 .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One