Search

Flash News: பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: தமிழக தேர்வுத் துறை விளக்கம்!!

Friday 21 February 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக் கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வை சராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால், அரசு, அரசுஉதவி பள்ளிகளில் ஒரு லட்சம் முதுநிலை ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். இவர்களை கொண்டு பொதுத் தேர்வை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது.அதனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போல தகுதியான தனியார் பள்ளி ஆசிரியர்களும் பொதுத்தேர்வு வேலைகளில் பயன்படுத்தப்படுவார்கள்.

அதேநேரம் அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உட்பட குறிப்பிட்ட பணிகளே அவர்களுக்கு வழங்கப்படும். முதன்மை கண்காணிப்பாளர், மையங்களை மேற்பார்வையிடுதல், விடைத்தாள் மற்றும் வினாத்தாளை எடுத்துச் செல்லுதல் போன்ற முக்கிய பணிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள். அனைத்து பணிநியமனங்களும் மிகவும் வெளிப்படையாக உரிய விதிகளின்படியே நடைபெறும். இது வழக்கமான நடைமுறைதான்.

கடந்த வாரம் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்குதான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று அறிவுறுத்தினோம். அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம். இவ்வாறு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One