Search

Two Days POST NAS Activities Training for BT Teachers - Proceedings

Friday 14 February 2020

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் , 2019 - 20ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க , தேசிய அடைவு ஆய்வுக்குப் பிந்தைய செயல்பாடுகளை Post NAS Activities திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளும் பொருட்டு , மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள்கள் Post NAS பயிற்சி வழங்கப்படவுள்ளது .

அதன் தொடக்கமாக , அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17 . 02 . 2020 மற்றும் 18 . 02 . 2020 ஆகிய இரண்டு நாள்கள் கீழ்க்காணும் அட்டவணைப்படி , அந்தந்த கல்வி மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது . பயிற்சியில் சரியான நேரத்தில் பங்குபெறும் வகையில் அறிவியல் பாட ஆசிரியர்களை பணிவிடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One