Search

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

Sunday 1 March 2020

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட் டிருந்தால் அந்த ஆசிரியர் களை 5ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தொடக்க கல்வி , ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , அரசு பள்ளி ஆசிரியர்கள்  1 . 1 . 2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது - அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்குஒருவட்டார கல்வி அலுவ லர் , ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்டதலைமை இடத் தில் முகாம் அமைத்து சரி பார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும் .அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெறவேண்டும் .

தமிழ்நாடு குடிமுறைப் பணி ஒழுங்கு முறையும் மேல் முறையீடும் விதிகளின் கீழ ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது நடவடிக்கையில் கண்டனம் தண் டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப் பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக்கூடாது .அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந் தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர் வுக்கு தேவையான கல் வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெ டுவிற்குள் பெற்றுள்ளார் களா என்பதை உறுதி செய்து கொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரி விக்கப்படுகிறது .

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One