Search

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்!

Saturday 30 May 2020



இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக பள்ளிகள் ஆண்டுக்கு 220 நாட்கள் செயல்படும். கொரோனாப் பரவல் காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் பணிநாட்கள் 100 நாட்களாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத் துறையிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.
இதுவரை நடத்தப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.

6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்களும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வரையிலும் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமிருக்கும் நாட்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே படிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டங்களையும் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One