Search

கொரோனாவால் பள்ளி செயல்படாத 2 மாத காலங்களை எவ்வாறு ஈடுகட்டுவது குறித்து ஆலோசனை ? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Saturday 6 June 2020

ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரி சலுகைகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் 

கொரோனாவால் பள்ளி செயல்படாத இரண்டு மாத காலங்களை எவ்வாறு ஈடு கட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் ஆகும் 

.கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தடை விதித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரம் வெளியாகும் என்றார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One