Search

இலவச நீட் பயிற்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு அழைப்பு.

Tuesday 2 June 2020


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி  ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது.

இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நிபுணர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் NEET TAMIL  என TYPE செய்து தங்களது முழு முகவரியுடன் 75501 51584 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாக ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற 79044 48456, 75501 51584 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One