Search

நாளை சூரிய கிரகண நேரத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

Saturday 20 June 2020

நாளை நடைபெற உள்ள சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும். இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும். இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வை காண முடியும்.

நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.

அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

சந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ!

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் (Lunar Eclipse) உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம்.

சரியான நேர் கோட்டில் வந்தால் (நட்ட நடுவில்) முழு சூரிய கிரகணம் அல்லது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இல்லை என்றால் பகுதி கிரகணம் ஏற்படுகிறது.

கிரகண சூட்சமம்:

பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.

உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்க செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.


கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீய கதிர்வீச்சுகள் நம்மை தாக்கும். அதனால் கிரகணத்தின் போது நம்மை காத்துக் கொள்ள சொல்கின்றனர்.

அதனால் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கிரகணத்தின் போது உடலுறவுக் கொள்ளக் கூடாது.

கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது என கூறப்படுகிறது.

கிரகணத்தின் போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரியோர் கூறுகின்றனர்.

கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

ஏன் தர்ப்பைப் புல்:

தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One