Search

10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும்: தேர்வுத்துறை

Sunday 5 July 2020


10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை என்றால் ஆப்சென்ட் அதாவது தேர்வுக்கு வருகை தரவில்லை என்று பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

கொரோனாவின் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் விடுபட்டுப்போன 11ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் பொது அறிவின் அடிப்படையில் 20 சதவீதமும் சேர்த்து மதிப்பெண் வழங்கப்பட்டு முடிவை அறிவிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.  மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை என்றால் ஆப்சென்ட்  என்று பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியிருக்கிறது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One