Search

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TRB புதிய அறிவிப்பு.

Saturday 2 July 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ! மற்றும் தாள் II ( TNTET Paper I and Paper II ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது.


மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் [ க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 11 க்கு 4,01,886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் . மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது . ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று , ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper I and Paper II ) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


TET

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One