Search

குரூப்-1 டிப்ஸ்: இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ

Wednesday 28 September 2022

 TNPSC Exam Preparation: குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய பொருளாதாரத்தில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம் பெறுவது வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலனைடையும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார்மயம்(Disinvestment) தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையயம் (ஐபிபிஎஸ்), ரயில்வே வாரியத் தேர்வுகள் (ஆர்ஆர்பி), யுபிஎஸ்சி  போன்ற போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் இந்த தலைப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

செய்தி:  துணை நிறுவனங்களை மூட பொது துறை நிறுவனத்துக்கு அனுமதி: 

ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பொதுத்துறை நிறுவனத்தின்  இயக்குநர்கள் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து   மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்:

முன்னதாக, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு (New Policy for strategic Disinvestment) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பிபிசிஎல், ஏர் இந்திய,  ஐடிபிஐ வங்கி, இந்திய கப்பல் கழகம், ரயில்வே துறையின் சரக்குப் பெட்டகக் கழகம் (Container Corporation of india), பாதுகாப்பு துறையின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்,  பவன் ஹான்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐபிஓ,நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் (NINL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் நிர்வாக கட்டுப்பாடு மாற்றத்துக்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஏர் இந்திய நிறுவனம் விற்பனை:  முன்னதாக, கடன் சுமையில் இருந்து வந்த ஏர் இந்திய நிறுவனத்தை மத்திய அரசு விற்றது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலஸ் நிறுவனத்தி டம் இருந்து ரூ. 2700 கோடியை அரசு பெற்றுக் கொண்டது.   மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல்-லின்  மொத்தக் கடனில் கடனில் (61 ஆயிரம் கோடி) ரூ,15,300 கோடி கடன் அளவை டாட்டா நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏஐஎக்ஸ்எல் -ன் (AIXL ) 100% பங்குகள் மற்றும் ஏஐஎஸ்ஏடிஏஎஸ்-ன் (AISATS) 50% பங்குகள் டாட்டா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகள் விற்பனை (LIC IPO): இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தின் 3.5  பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்தது. இதன் மூலம் தற்போதைய பங்கு வெளியீட்டின் மதிப்பு ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for TNPSC,TRB,TET Daily updates & studymaterials

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One