Search

தமிழ்நாடு தொழில்துறை ஓர் அலசல் TNPSC GROUP2 STUDY MATERIALS 2018

Monday 27 August 2018


  1. சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும், வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது. 
  2. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா, ஆயத்த ஆடைகள் பூங்கா, பூக்கள்பூங்கா, உயிரி தொழில்நுட்பப் பூங்கா, சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் வேளாண் ஏற்றுமதிப் பூங்கா போன்ற பல துறைகளையும் முன்னேற்றியுள்ளது.
  3. மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மையமிட்டுள்ளன.
  4.  சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்திஜாம்பவான்களின் நகரமாக உள்ளது.
  5. பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற கரூர், தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் 80% மாக உள்ளது.
  6. கரூரில் உள்ள தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே
  7. மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
  8. 'எஃகு நகரம்' என்றழைக்கப்படும் சேலத்தில் பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும் கனிமச் செல்வங்களும் உள்ளன.
  9. சிவகாசியில் அச்சுத் தொழில், பட்டாசு நிறுவனங்கள், தீப்பெட்டித் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 90% பங்கும் சிவகாசியில் உற்பத்தியாகிறது.
  10. 'தமிழகத்தின் நுழைவாயில்' தூத்துக்குடி ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாகவேதிப்பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  11. தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும்.
  12.  தமிழ்நாடு இந்தியாவின் 'நூல் கிண்ணம்' என அழைக்கப்படுகிறது.
  13. இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41 சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
  14. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பைவழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பையும், மொத்தஏற்றுமதி வருவாயில் 35% ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது.
  15. உற்பத்தித்துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது. நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
  16. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல் (Blended Yarn), பட்டு நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன.  இங்கிருந்து சீனாவங்கதேசம் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  17. 'பின்னலாடைகளின் நகரம்' என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது. திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், கழிவறை விரிப்புகள், மேஜை விரிப்புகள, சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.
  18. ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது.



தோல்பொருட்கள் :

  1. இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30% -யும், தோல் பொருட்கள் தயாரிப்பில் 70 சதவீதத்தையும் தமிழகம்கொண்டுள்ளது. 
  2. நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.
  3. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.



மின்னணு சாதனங்கள் :

  1. மின்னணு சாதனங்கள் உற்பத்தியானது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் துறைகளில்ஒன்றாக உள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள், தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக
  2. சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.


வாகன உற்பத்தி:

  1. 'ஆசியாவின் டெட்ராய்ட்'
  2. என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள்தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது.
  3. தமிழ்நாடு, இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28 சதவீதமும், லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும், பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீதமும் கொண்டுள்ளது.


சிமெண்ட் தொழிற்சாலை :

  1. சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3 இடத்தில் உள்ளது
  2. (ஆந்திர பிரதேசம் -முதலிடம், ராஜஸ்தான் -இரண்டாமிடம்). 2018-ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியாசிமெண்ட்  ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  3. மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், 35 அலகுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் உள்ளது.
  4. சிவகாசி நகரம் அச்சுத் தொழில்,பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு அவர்களால் 'குட்டி ஜப்பான்' என்று சிவகாசி அழைக்கப்பட்டது.
  5. இந்திய பட்டாசு உற்பத்தியில் 80% சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் அச்சுத் துறைத் தீர்வுகளில் 60% சிவகாசியிலிருந்தே பெறப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One