Search

குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் முக்கிய குறிப்புகள்

Tuesday 4 September 2018

குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் முக்கிய குறிப்புகள்

* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்

* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்

* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

* போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

* 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

* செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

* அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

* பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+

* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

* ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

* ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட்ZnSO4

* உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

* ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

* சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

* ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்

* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

* புளோயம் ஒரு கூட்டு திசு

* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.

* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்

* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.

* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One