Search

குரூப் தேர்விற்காக நீரை பற்றிய முக்கிய குறிப்புக்கள்

Sunday 16 September 2018

# புவிப்பரப்பில் உள்ள நீரின் அளவு - 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோமீட்டர்
# புவியில் தூய நீரின் அளவு - 3 சதவீதம்
# மனித உடலில் நீரின் சதவீதம் - 65 சதவீதம்
# தக்காளியில் நீரின் சதவீதம் - 95 சதவீதம்
# உருளைக்கிழங்கில் நீரின் சதவீதம் - 80 சதவீதம்
# நாள் ஒன்றுக்கு குடிநீராக பெண்ணுக்கு குறைந்த அளவு தேவைப்படும் நீர் - 1.5 லிட்டர் தூய நீர்
# ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு - 2 லிட்டர்
# ஒரு நபருக்கு தேவைப்படும் திரவ உணவு - 3.4 முதல் 4 லிட்டர்
# நீரானது திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 0 டிகிரி செல்சியஸ்
# திரவ நிலையில் உள்ள நீர் வாயு நிலைக்கு மாறுவது எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 100 டிகிரி செல்சியஸ்
# நீரின் ஆவியாதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 537 கலோரி
# நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 79.7 கலோரி/கிராம்
# ஒரு கிராம் பனிக்கட்டியானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராக மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் என்பது - உருகுதலின் உள்ளுறை வெப்பம்
# ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு - தன்வெப்ப ஏற்புத்திறன்
# தன் வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜூல்/கிராம்/கெல்வின்
# பெரும்பாலான பொருட்கள் கரைகின்ற காரணத்தால் நீரை சர்வ கரைப்பான எனலாம்
# கரைபொருளும் கரைப்பானும் சேர்ந்த ஒருபடித்தான் கலவையே - கரைசல்
# நீரின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு - 4.184 ஜூல்/கிராம்/கெல்வின்
# உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ஆண்டு தோறும் எவ்வளவு மக்கள் குடிநீர் மாசுபடுலினால் இறக்கின்றனர் - 5 மில்லியன் மக்கள்
# மாசு கலந்த நீரை மனிர்கள் உட்கொள்வதால் ஏற்படும் நோய்கள் - வயிற்றுப்போக்கு, சீதபேதி, மஞ்சள்காமாலை, காலரா, டைபாய்டு
# நீரின் மூலக்கூறு நிறை - 18
# நீரின் மூலக்கூறு வடிவம் - V வடிவம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One