தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.?


தேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

தேசிய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளில் சேருவதற்கு எம்யூசெட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்த வேண்டும்.