Search

கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு

Friday 31 January 2020

சென்னை : கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் துவக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான விதிமுறைகளையும், தற்போதுள்ள சூழ்நிலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை உருவாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.


அதேபோல, சென்னை உயர்நீதிமன்றமும், பொது நல வழக்குகளில், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றின் அடிப்படையில், தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்தாலோ, உடல் நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாமல், 53 வயதிற்குள் ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு பணி வழங்கலாம்.ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு விதிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One