Search

Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO - Download )

Friday 31 January 2020


PTA - Primary And Upper Primary  Temporary  Teachers Appointment GO - Download here

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ . 7 , 500 / - தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் பார்வையில் காண் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

மேலும் இப்பொருள் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது .

* தற்போது ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மட்டும் அந்ததந்த ஊர்களில் அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது .

* அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் . இவ்வாறு தெரிவு செய்யும் நபர்களை இடைநிலை ஆசிரியர் பதவிக்கு மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தெரிவு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ . 7 , 500 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் .

நிபந்தனைகள்

* ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும் அவர்களின் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது . ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர் பணிக்காக தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு நிரப்பி கொள்ள வேண்டும் .

* இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி பெற்ற நபர்களை பார்வையில் காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர் கொண்ட குழுவின் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நிரப்பி கொள்ள வேண்டும் .

* பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் , அக்காலகட்டத்திற்குள் தொடர்புடைய பாடப்பகுதிகள் ( Portion ) அனைத்தும் அவ்வாசிரியரால் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதோடு இதனை சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும் .

* மேலும் , இந்நடவடிக்கைகள் பள்ளிப் பார்வையின் போது தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும் . மேற்கண்ட ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு உடன் விடுவிக்க வேண்டும் .

* இவ்வாறு பெறப்படும் நிதி தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் .

* மேலும் , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும் . இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச் சீட்டு பள்ளித் தலைமையாசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும் . பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்கள் 2019 - 2020 - ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலை நாளன்று உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும் .

* இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கக்கூடாது . மேலும் , இவ்வாசிரியர்களின் பெயர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் அரசு ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தல் கூடாது மற்றும் பணிச்சான்று எதுவும் வழங்குதல் கூடாது . இக்கடிதத்தில் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இவ்வரசாணையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் நிரப்பிக் கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

* இவ்வாறாக பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரம் பள்ளி வாரியாக தொகுத்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One