Search

IAS, IPS, IRS - UPSC - முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

Sunday 23 February 2020


1. Indian Administrative Service
2. Indian Foreign Service
3. Indian Police Service
4. Indian P&T Accounts & Finance Service, Group 'A'
5. Indian Audit and Accounts Service, Group 'A'
6. Indian Revenue Service (Customs and Central Excise), Group 'A’



7. Indian Defence Accounts Service, Group 'A'
8. Indian Revenue Service (I.T.), Group 'A
9. Indian Ordnance Factories Service, Group 'A' (Assistant Works Manager, Administration)
10. Indian Postal Service, Group 'A'
11. Indian Civil Accounts Service, Group 'A'
12. Indian Railway Traffic Service, Group 'A'
13. Indian Railway Accounts Service, Group A'
14. Indian Railway Personnel Service, Group 'A'
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group 'A'
16. Indian Defence Estates Service, Group 'A'



17. Indian Information Service (Junior Grade), Group 'A’
18. Indian Trade Service, Group `A'
19. Indian Corporate Law Service, Group 'A'
20. Armed Forces Headquarters Civil Service, Group 'B' (Section Officer's Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group `B'
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'
23. Pondicherry Civil Service, Group 'B'
24. Pondicherry Police Service, Group 'B'
இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination 2020) அறிவிப்பை மத்திய தேர்வாணையக் குழு (Union Public Service Commission) வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இடம்பெற்றிருக்கும் 24 வகையான பணிகளில், தற்போதைய நிலையில் 796 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 24 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



தேர்வுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஒரு இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயது ஆகியிருக்க வேண்டும். 1-8-2020 அன்று 32 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் – 5, ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு. பிற வயதுத் தளர்வு குறித்த தகவல்களுக்கும், உடற்தகுதி தகவல்களுக்கும் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் இத்தேர்வை 6 முறைகளுக்கு மேல் எழுத இயலாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்தக் கட்டுப்பாடு எதுவுமில்லை.



இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination, 2020) விண்ணப்பப் படிவத்தை, இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், பகுதி 1 மற்றும் பகுதி 2 என்று இரு பகுதிகளாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பகுதி 1 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்திவிட்டு, பிறகு பகுதி 2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-3-2020.



தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏதாவதொரு சூழலில் விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பினால், 12-3-2020 முதல் 18-3-2020 வரை பெற்றுக்கொள்ள முடியும். திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் தகவல் குறிப்பேட்டில் தனி இணைப்பாகக் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் உட்பட, இந்தியா முழுவதும் 72 நகரங்களில் தேர்வு நடத்தப்பெறும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை (E-Admit Card) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (Civil Services (Preliminary) Examination, 2020) தாள் 1 - கொள்குறி வகைத் தேர்வு (Paper I - Objective Type) – 200 மதிப்பெண்கள், தாள் 2 பொதுக்கல்வித் தேர்வு (Paper II - General Studies) – 200 மதிப்பெண்கள் என்று இரு தாள்களுக்கான தேர்வுகளாக நடைபெறும். இத்தேர்வு ஒவ்வொன்றுக்கும் இரண்டு மணி நேரம் கால அளவாக இருக்கிறது. இத்தேர்வில், தாள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 33% மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.



இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 தகவல் குறிப்பேட்டில் தெரிந்துகொள்ளலாம். அல்லது, டெல்லியிலுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் ‘C’ Gate அமைந்திருக்கும் உதவி மையத்தில் நேரடியாகப் பெறலாம். அல்லது தேர்வாணைய அலுவலகத்தின் அலுவலக வேலை நேரத்தில் 011 - 23385271, 23381125, 23098543 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One