Search

10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - தலைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு

Wednesday 17 June 2020

பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ கணக்‌கிட காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்‌ ஏற்‌ கனவே மாணவர்களிடம்‌ ஓப்படைக்கப்பட்டதால்‌ அதை சிஇஓ அலுவலகத்‌ துக்கு அனுப்ப முடியாமல்‌ பல பள்ளிகளின்‌ தலை மையாசிரியர்கள்‌ குழப்‌ பத்தில்‌ உள்ளனர்‌.

கொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஊர டங்கு அமல்படுத்தப்‌ பட்டதால்‌, தமிழகத்தில்‌ அனைத்து பள்ளிகளும்‌ மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட 10 மற்‌ அம்‌ பிளஸ்‌ 1 வகுப்புக ளுக்கான தேர்வுகளை முற்றிலும்‌ ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த இரண்டு தேர்‌ வுகளிலும்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்படும்போது அந்த மாணவர்கள்‌ காலாண்டு, அரையாண்டு தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்‌ களில்‌ 80 சதவீதம்‌, வருகைப்‌ பதி வுக்கு 20 சதவீதம்‌ என்று கணக்கிட்டு மொத்தம்‌ 100 மதிப்பெண்கள்‌ வழங்கப்‌படும்‌ என்று அரசு அறி வித்தது.

இந்நிலையில்‌ மாணவர்‌ களின்‌ வருகைபதிவு மற்றும்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ (ரேங்க்‌ அட்டை) ஆகிய வற்றை வரும்‌ 27ம்‌ தேதிக்‌ குள்‌ அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்துக்கு அனுப்பி வைக்கும்‌ படி அந்தந்த பள்ளி தலைமையாசிரி யர்களுக்கு உத்தரவிடப்‌ பட்டுள்ளது.

இந்நிலையில்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌, அந்தந்த காலத்தில்‌ மாணவர்களி டமேஒப்படைக்கப்பட்ட தால்‌ விடைத்தாள்களை சேகரிப்பது கடினம்‌. இதனால்‌ பல பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்‌ கள்‌ என்ன செய்வது என்று தெரியாமல்‌ குழப்பத்தில்‌ உள்ளனர்‌. எனவே ரேங்க்‌ அட்‌ டையில்‌ உள்ள மதிப்‌ பெண்‌ பட்டியல்‌ படி கணக்கிட வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளனர்‌.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One