Search
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு
Thursday 11 June 2020
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. அடுத்ததாக பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வுகளை எழுதி முடித்த சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்குவது சற்று சவாலாகவே இருந்தது.கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே ஏப்ரல் மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மாதம்(மே) 27-ந்தேதி அதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் 27-ந்தேதி முதல் பிளஸ்-2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து. அதற்காக 201 மையங்களில் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற்றன.இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவுபெற்று இருக்கின்றன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேற்றம்செய்யும் பணிகள் அடுத்தக் கட்டமாக தொடங்கி நடைபெறஉள்ளது.
பிளஸ்-2 வகுப்புக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், அதற்கு அடுத்ததாக பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தவாரத்துக்குள் அந்த பணிகளும் நிறைவுபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment