Search

TN TET Exam 2022 | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூலை இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு!

Monday 23 May 2022

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது.




ஆனால், தேர்வுக்கான தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தகுதி பெற, TN TET என்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவே இதற்கான குறைந்தபட்ச தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், TN TET தாள் 1'இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் தாள் 2'இல் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) 2022 ஆண்டுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இந்த கால இடைவெளியில், 6.3 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இன்று வரை இந்த தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் சில வட்டாரங்கள் வருகின்ற ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இதில் இருக்காது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜூலை மாதத்திற்குள் சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) அறிவிப்பை வெளியிடும். இது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். அதே போன்று இந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இரண்டாவது அமர்வு டிசம்பரில் நடத்தப்படும். 2021ம் ஆண்டில், சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆன்லைனில் நடத்தப்பட்டது. இருப்பினும், தேர்வின் முதல் நாள் அன்று, தேர்வு எழுதியவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் பலரால் தேர்வை சரியாக முடிக்க கூட முடியவில்லை.

மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி, மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண் பொருந்தும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்யும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One