Search

தமிழக ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க

Thursday 29 June 2023

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சிவகங்கை மாவட்டத்தில் வட்டார அளவில் பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 11.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வட்டார இயக்க மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/06/2023062684.pdf என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி: இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562, சிவகங்கை மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/06/2023062347.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One