Search

அரசு கவின் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; குறைந்தப்பட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Thursday 29 June 2023

 கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் திறன்பெறா உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

திறன்பெறா உதவியாளர் (Unskilled Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/06/2023062786.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர் (பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் – 612002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/06/2023062786.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One