Search

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | தமிழில் சில முக்கிய வினாக்கள்

Sunday 25 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS | தமிழில் சில முக்கிய வினாக்கள்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.  அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்  
25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் -  தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42. அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.  அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One