ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

Join Our TNPSCTRB Telegram Group - Click Here

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த காலிப் பணியிடம் : 01

ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : வயது வரம்பு குறித்த விபரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :

General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : வாய்மொழி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.