Search

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்!

Saturday 16 November 2019

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், ட்ரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.



பயிற்சி பணிகள்:

1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் (Fitter)
2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் (Electrician)
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் (Electronics Mechanic)
4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் (Instrument Mechanic)
5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட் (Machinist)
6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் (Mechanical)
7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்டேசன் (Instrumentation)
8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில் (Civil)
9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (Electrical & Electronics )
10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் (Electrical)
11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் (Electronics)
12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் (Accountant)



பயிற்சிப் பணியிடங்கள்:

மொத்தம் = 2,085 காலியிடங்கள்

பயிற்சிக் காலம்:

ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை.

குறிப்பு:

பணியை பொருத்து பயிற்சி காலம் மாறுபடும்.

முக்கிய தேதிகள்:

1. 1,574 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.11.2019



2. 380 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2019, மாலை 06.00 மணி வரை
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 08.12.2019

3. 131 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.11.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 15.12.2019

வயது வரம்பு:

பொதுப் பிரிவினர்: 18 முதல் 24 வயது வரை
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 18 முதல் 29 வயது வரை
ஓபிசி பிரிவினர்: 18 முதல் 27 வயது வரை

கல்வித்தகுதி:

1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (ஃபிட்டர்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2-வருட ஐடிஐ (எலக்ட்ரீசியன்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ்மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரானிக் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்புதேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2-வருட ஐடிஐ (மெஷினிஸ்ட்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்டேசன் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ஸ்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, ஏதாவது ஒரு டிகிரி பட்டப்படிப்பில்பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின், https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_apprsep19.aspx - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற
1. https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/Consolidated_6979.pdf



2. https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf

3. https://www.iocl.com/download/Detailed-Advertisement%20-for-Apprentice-Engagement%20-Western-Region_2019-'20-1st-cycle.pdf- போன்ற இணைய முகவரியில் சென்று
தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One