Search

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.

Tuesday 21 January 2020

பள்ளிக் கல்வி - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது .


ஆணை :

1. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை தோற்றுவித்தும் மற்றும் இப்பள்ளிகளுக்கென 100 தலைமையாசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிக்கான தலைமையாசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக ( புதிய ஊதிய நிலை 16 - ரூ . 36 , 400 - 115700 / - ) அனுமதித்தும் , மேலும் , இப்பள்ளிகளுக்கென 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( ஊதிய நிலை 13 - ரூ . 35 , 900 - 113500 ) புதிதாக தோற்றுவித்தும் அப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே பணிபுரியும் 300 பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொண்டும் , மீதமுள்ள 200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியிடங்களுடன் பணிநிரவல் மூலம் நிரப்ப அனுமதி வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது ; மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் இணைப்பு - 1க்கு சில திருத்தங்கள் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .

2 . மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி , 2018 - 2019 - ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இப்பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு , 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் .

3 . மேற்காண் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து , மேலே படிக்கப்பட்ட அரசாணைகளின்படி 2018 - 19 - ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ( இவ்வாணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ) 100 உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ( ரூ . 36 , 400 1 , 15 , 700 - நிலை - 16 ) பணியிடங்களுக்கு 08 . 08 . 2019 முதல் 31 . 12 . 2021 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றுள் எது முன்னரோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது .

4 . மேலே பத்தி 3 - ல் பணியிட தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்புகளின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One