Search

கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று பஸ் விட்ட அதிகாரிகள்

Wednesday 5 February 2020

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம்தான் மீனாட்சிபுரம். அங்கு குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி சஹானா, தனது சக தோழிகள் சிலருடன் கலந்து கொண்டாள். கூட்டத்தில் அவள், “மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி கிடையாது. என்னுடைய சகோதரிகள் உள்பட எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மேல்படிப்புக்காக மாயாண்டி கிராமத்துக்கு சென்று படித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு சாலை வசதி செய்து, பஸ் விட வேண்டும்” என்று வலியுறுத்தி பேசினாள்.

5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சஹானா, கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு துணிச்சலாக பேசிய காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி அவளுக்கு பாராட்டை பெற்றுத்தந்தன. சிறுமியின் கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த மாணவி கோரிக்கை வைத்த நேரத்துக்கு பஸ் விட்டனர். இதனால் ஊர்மக்களும், மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தங்களுக்காக கிராமசபை கூட்டத்தில் பேசிய சிறுமி சஹானாவுக்கும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One