Search

School Morning Prayer Activities - 06.02.2020

Wednesday 5 February 2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்கம்:

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

பழமொழி

Discretion is better than valour

விவேகம் வீரத்தினும் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

காலங்கள் சொல்லும் பாடம் ஒரு நாளும் பொய்யாவதில்லை. கற்றுக்கொண்டோர் ஒருநாளும் வீணாவதில்லை.

பொது அறிவு

1.வேதியியல் நவீன ஆவர்தன அட்டவனையில் (The modern periodic table) இடம் பெறாத ஒரே ஆங்கில எழுத்து எது?

 J

2.தக்காளி பழம் சிவப்பு நிறத்தில் இருக்கக் காரணமான நிறமி எது?

 லைக்கோப்பீன்.

English words & meanings

Jacinth - a reddish-orange gem. செவ்வந்தி கல்.

Jaguar - a large wild cat with black spots that comes from Central and South America.மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த, கரும்புள்ளிகளுடைய பெரிய பூனையினக் காட்டு விலங்கு வகை.

ஆரோக்ய வாழ்வு

கொய்யாவில் நிறைந்துள்ள நார்சத்து காரணமாகவும் மற்றும் குறைந்த கிளைசிமிக் குறியீட்டின் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது.

Some important  abbreviations for students

govt. - government. 

ea. - each

நீதிக்கதை

சிங்கத்தை ஏமாற்றிய முயல்

குறள் :
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

விளக்கம் :
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

கதை :
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடிவிடும். காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்தது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேச வேண்டும் என தீர்மானம் போட்டது.

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையாடக் கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் எனக் கூறியதும், சிங்கமும் சரி என்றது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை, அது உணவாக சிங்கத்திடம் செல்ல வேண்டும். மிகுந்த கவலையுடன் சென்ற போது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜாவிடம் சென்றது. சிங்கராஜாவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது, அதற்கு முயல், சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன். அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று. அதற்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என கூறியது.

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது. முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது. முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது. முயலின் உட்பகையை அறிந்து கொள்ளாமல் அழிந்தது.

நீதி :
உரிய இடத்தில் தந்திரத்தோடு செயல் பட வேண்டும்

இன்றைய செய்திகள்

06.02.20

★போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட போலீஸாருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகமாகிறது.

★கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்த 320 அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்துக்கு முன்பாகவே ஓய்வு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

★அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள பியூர்டோ ரிகோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

★தென் ஆப்பிரிக்காவில் நடந்துவரும் 19 வயதுக்குப்பட்டோருக்கான 50 ஓவர்கள் உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 172 ரன்களில் சுருண்டது.

★இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 Tenkasi district police  introduced a new mobile app for first time in Tamil Nadu to take action against traffic violators

 🌸 The Union Minister of Labourers,Mr. Jitendra Singh has said that 320 officers in the central government departments who have been accused of corruption in the past five years have been sent by compulsory retirement before their retirement.

 🌸 A powerful earthquake  hit Puerto Rico in the US region.

 🌸 In the semifinals of the 50-over World Cup tournament  for 19 years old in South Africa,  The Pakistan team was unable to cope with the Indian bowling and lost their battle by 172 runs.

🌸 Newzealand had a tremendous victory by 4 wickets in the first one day match against India.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One