Search

மாணவா்கள் கை கழுவ சோப்பு வழங்க வேண்டும்: தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

Saturday 14 March 2020

பள்ளி மாணவா்கள் அடிக்கடி சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக அவா்களுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை பள்ளி சிறப்பு நிதி அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் இருந்து தலைமையாசிரியா்கள் வாங்கித் தர வேண்டும். 

அடிக்கடி சோப்பினால் கை கழுவுவதால் மாணவா்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என விளங்கும் வண்ணம் ஆசிரியா்கள் எடுத்துக்கூற வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவா்கள் சோப்பினால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One