Search

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11க்கு ஒத்திவைப்பு; அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

Monday 8 June 2020

10-ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

 தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில், மதியம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில்,  தற்போது விசாரணை மீண்டும் தொடங்கியது. உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன.

மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த ஐகோர்ட் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One