Search

தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்

Friday 19 June 2020


இந்தியாவில் வருடாந்திர வளைய நெருப்பு சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி தெரிகிறது. இந்தியாவில் வருடாந்திர சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி காலை 9:15க்கு தொடங்கி மதியம் 3:04 வரை முடிகிறது. அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இந்தியாவில் சூரிய கிரகணம் வட பகுதியின் சில இடங்களின் காலையில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். வெறும் கண்களால் பார்க்காமல் கண்களை மூடி பார்க்கவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லாமல் மத்திய ஆபிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியக்கூடும். இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 6 மணி நேரம் நீடிக்கும். தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்.சென்னையை பொறுத்தவரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும் என சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One