Search

மத்திய அரசில் 1564 காலியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

Friday 19 June 2020

இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 Sub Inspector (GD) மற்றும் Sub Inspector (Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜூலை 16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: F. No. 3/2/2020P&P-II

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 1564

பணிகள்: Sub Inspector (GD), Sub Inspector (Executive)

பணி: SI in Delhi Police (Male) - 91
பணி: SI in Delhi Police (Female) - 78
பணி: SI (GD) in CAPF - 1395

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: CBT, Physical Standard Test (PST), Physical Endurance Test (PET) and Detailed Medical Examination (DME) போன்ற தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்ப முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_17062020.pdf என்ற லிங்கில் சென்று சதெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2020

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One