Search

10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு.

Wednesday 1 July 2020

ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் அறிக்கை:

தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கைநடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள், வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர், டிரைவர் என, ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை உணர்த்த, வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில், பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One