Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD | 9 ஆம் வகுப்பு புதிய பதிப்பு - புவியியல் | PART-2

Monday 5 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | 9 ஆம் வகுப்பு புது பதிப்பு - புவியியல் | PART-2
31) இக்னிஸ் என்ற இலத்தின் சொல்லின் பொருள் – நெருப்பு

32) புவியின் உள் ஆழத்தில் உருகிய நிலையில் காணப்படுவது – MAGMA (பாறைக்குழம்பு)

33) பாறைக்குழம்பானது புவியின் மேலோட்டில் வெளிப்படுவது – லாவா

34) வாவா எனப்படும் பாறைக்குழம்பு தனிவதால் ஏற்படுவது – தீப்பாறை

35) தீப்பாறைகளால் உருவான பீடபூமி – தக்கான பீடபூமி

36) தீப்பாறையின் வேறுபெயர்கள் – முதன்மைப் பாறை, தாய்ப்பாறை

37) தீப்பாறைக்கு உதாரணம் – கருங்கல் (கிரானைட்), பசால்ட்

38) செடிமென்ட் என்ற இலத்தின் சொல்லின் பொருள் – படிதல்

39) படிவுப்பாறைகளுக்கு உதாரணம் – மணற்பாறை, சுண்ணாம்புப்பாறை, சுண்ணாம்பு, ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கரி மற்றும் கூட்டுப்பாறைகள்

40) முழுவதும் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் – பெட்ரா நகரம் (ஜோர்டான்)

41) பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட இந்திய கலைச்சான்றுகள் :-
1) அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் (மகாராஷ்ட்ரா)
2) ஐஹோல் (கர்நாடகா)
3) பதாமி கோயில்கள்(கர்நாடகா)
4) கோனார்க் கோயில் (ஒடிசா)
5) மாமல்லபுரம் (தமிழ்நாடு)

42) மெட்டமார்பிக் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது – மெட்டமார்பிசஸ்

43) மெட்டமார்பிக் என்ற சொல்லின் பொருள் – உருமாறுதல்

44) கிரானைட் பாறை எவ்வாறு உருமாறுகிறது – நீஸ்

45) பாசால்ட் பாறை எவ்வாறு உருமாறுகிறது – சிஸ்ட்

46) சுண்ணாம்புப்பாறை எவ்வாறு உருமாறுகிறது – சலவைக்கல்

47) மணற்பாறை எவ்வாறு உருமாறுகிறது – குவார்ட்சைட் பாறை

48) உருமாறிய பாறைக்கு உதாரணம் – வைரம், பளிங்குக்கல்

49) கிரானைட் பயன் – கட்டடம் கட்டுவதற்கு

50) பாசால்ட் பயன் – சாலைகள் அமைப்பதற்கு

51) ஜிப்சம் பயன் – சுவர் பலகை, சிமெண்ட், பாரீஸ் பிலாஸ்டர், கட்டுமானப்பொருள்

52) சுண்ணாம்புக்கல் பயன் – இரும்பை சுத்திகரிக்க

53) வைரத்தின் பயன் - ஆபரணம் செய்ய

54) பளிங்குக்கல் பயன் – சிற்பங்கள் செதுக்க

55) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயற்படும் விசை – அகச்செயல் முறை

56) புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குவது – அகச்செயல் முறை

57) புவிப்புறச் செயல்முறை காரணிகள் – ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள்

58) புவித்தட்டுகள் நகர்விற்கு காரணம் – கவசத்தில் காணப்படும் வெப்ப சக்தி

59) கோண்டுவானா நிலப்பகுதியிலிருந்து பிரிந்த இந்திய புவித்தட்டு பகுதிகள் – ஆப்பிரிக்கா, ஆஸ்திரெலியா, அண்டார்டிகா, தென்னமெரிக்கா

60) புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி – புவி அதிர்ச்சி கீழ்மையம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One