‘ஆன்லைனில்’ விண்ணப்பம் ஓய்வூதியருக்கு உத்தரவு
Tuesday, 14 July 2020
முதியோர் ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்களுக்கான கோரிக்கை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம்.முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அந்தந்த தாலுகாக்களில் உள்ள இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment