Search

தொலைக்காட்சி வழி கல்வி, பாடப்புத்தகம் வழங்குதல் , கல்வியாண்டின் திட்ட அறிக்கை வல்லுநர் குழு சமர்பித்தல் தொடர்பான முதல்வர் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகளின் செய்தி அறிக்கை.

Tuesday 14 July 2020

Honble Chief Minister launched the TV Channel for students of 10th Standard, handed over free books to 10th and 12th Standard students and received the report of the Expert Group to advise on Academic and Teaching issues arising due to COVID -19

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று ( 14.7.2020 ) தலைமைச் செயலகத்தில் , கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தொடங்கி வைத்தார்கள். மேலும் , 10 – ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்கள். பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் , பொதுத் தேர்வுகள் , கல்வி உதவித் தொகை தேர்வுகள் , நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் , கல்வி தொலைக்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.8.2019 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இத்தொலைக்காட்சியில் , எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் , படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் , மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள் , பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள் , புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல் , அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் , கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

கோவிட் -19 வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் , கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.

மாணவ , பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 – ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை ( Video Lessons ) மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi – Tech Labs ) வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை , அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு பள்ளிக் கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு . கே.ஏ. செங்கோட்டையன் , தலைமைச் செயலாளர் திரு . க . சண்முகம் , இ.ஆ.ப. , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு . தீரஜ்குமார் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு :
இயக்குநர் ,
செய்தி மக்கள் தொடர்புத்துறை ,
சென்னை -9
நாள் : 14.7.2020 )

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One