Search

சத்துணவு பொருட்களை பெற்றுக் கொள்வது எப்படி..

Tuesday 14 July 2020

சத்துணவு பொருட்களை பெற்றுக் கொள்வது எப்படி..சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 42 இலட்சத்து 61 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத காரணத்தால் சத்துணவு திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் மாணவர்கள் பலனடைவதற்காக, மே மாதத்திற்கான சத்துணவு உலர்பொருட்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 16 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசியும், 5200 டன் பருப்பும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3.100 கிலோ அரிசி மற்றும் 1.200 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதுபோல 6 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 4.650 கிலோ அரிசி மற்றும் 1.250 கிலோ பருப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த உலர் உணவு பொருட்களை பெறுவதற்காக சத்துணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மற்றும் அடையாள அட்டையுடன் தாங்கள் கல்வி பயிலும் பள்ளிக்கு செல்லவேண்டும்.பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு மைய அமைப்பாளர்கள் மூலமாக மாணவர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் முகக்கவசம் அணிந்தபடி, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சமூக நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One