Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-10

Sunday 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-10
===========================
900) பன்பெனப்ப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – இவ்வரிகளின் பொருள்?
பன்பெனப்படுவது சான்றோர் வழி அறிந்து நடத்தல்
901) அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை – இவ்வரிகளின் பொருள்?
அன்பெனப்படுவது தன்சுற்றம் (சொந்தம்) தழுவி வாழ்தல்
902) அறிவெனப்படுவது பேதையார் சொல்நோன்றல் - இவ்வரிகளின் பொருள்?
அறிவு எனப்படுவது அறிவில்லாதவர்களின் சொல்லை பொறுத்தல்
903) செறிவெனப் படுவது கூறியது மறா அமை – இவ்வரிகளின் பொருள்?
நெருக்கம் என்பது கொடுத்த வாக்கை காத்து நிற்றல்
904) நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை - இவ்வரிகளின் பொருள்?
நிறைவு எனப்படுவது பிறர் அறியாது மறைபொருள் காத்தல்
905) முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வெளவல் - இவ்வரிகளின் பொருள்?
நீதிமுறை எனப்படுவது ஒருபால் கோடாது ஒறுத்தல்
906) பொறையெனப்படுவது போற்றாரை பொறுத்தல் - இவ்வரிகளின் பொருள்?
பொறுமை எனப்படுவது இகழ்வாரையும் பொருத்துக் கொள்ளல்
907) கலித்தொகையை தொகுத்தவர்?
நல்லந்துவனார்
908) நெய்தல் கலியில் நல்லந்துவனார் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
முப்பத்துமூன்று பாடல்கள்
909) சங்க இலக்கியங்கள் எவை?
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
910) எட்டுத்தொகை நூல்களில் நாடகப்பாங்கில் அமைந்துள்ள நூல்?
கலித்தொகை
911) இசையோடு பாடுவதற்கு ஏற்ற எட்டுத்தொகை நூல்?
கலித்தொகை
912) கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?
நூற்றைம்பது பாடல்கள் (149 + 1 = 150)
913) கலித்தொகை எத்தனை பெரும் பிரிகள் கொண்டது?
ஐந்து (குறிஞ்சிக்கலி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
914) கலிப்பா எவ்வகை ஓசையை கொண்டது?
துள்ளல் ஓசை
915) எப்பாடல்களை படிக்கும்பொழுது, கருத்தாழமும், ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும்?
நெய்தற்கலி பாடல்களை படிக்கும்பொழுது
916) “கற்றறிந்தார் ஏத்தும் கலி” – எனச் சான்றோர்கள் சிறப்பித்துக் கூறும் நூல்?
கலித்தொகை
917) பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகரா – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
நந்திக் கலம்பகம்
918) பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகரா – இப்பாடலில் அமைந்துள்ள திணை?
பாடாண் திணை – நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறுவதால்
919) நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர்?
அறியப்படவில்லை
920) நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்?
மூன்றாம் நந்திவர்மன்
921) நந்திக்கலம்பகம் என பெயர்பெறக் காரணம்?
மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாக பாடப்பெற்ற கலம்பகம் ஆதலால்
922) நந்திக்கலம்பகம் எழுதப்பெற்ற ஆண்டு?
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
923) கலம்பகம் – பிரித்து எழுதுக.
கலம் + பகம்
924) கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுகிறது?
பதினெட்டு உறுப்புகள்
925) கலம்பகத்தில் கலம் என்பது எத்தனை உறுப்புகளை கொண்டது?
பன்னிரண்டு உறுப்புகள்
926) கலம்பகத்தில் பகம் என்பது எத்தனை உறுப்புகளை கொண்டது?
ஆறு உறுப்புகள்
927) கலம்பகத்தில் உள்ள பதினெட்டு உறுப்புகளை எவை?
1. புயவகுப்பு
2. அம்மானை
3. கார்
4. ஊசல்
5. இரங்கல்
6. மறம்
7. தழி
8. தவம்
9. சித்து
10. பாண்
11. கைக்கிளை
12 தூது
13. வண்டு
14. குறம்
15. காலம்
16. மாதங்கி
17. களி
18. சம்பிரதம்
928) கலம்பகம் எவ்வகை நூல்?
96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று
929) பணை என்னும் சொல்லின் பொருள்?
மூங்கில்
930) கலம்பக நூல்களில் முதல் நூலாகக் கூறப்படுவது எது?
நந்திக் கலம்பகம்
931) மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் – இப்பாடல் இடம்பெறு நூல்?
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
932) மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் – இப்பாடலை பாடியவர்?
குலசேகர ஆழ்வார்
933) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர்?
திருவஞ்சைக்களம் – கேரளா
934) குலசேகர ஆழ்வாரை குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட காரணம்?
இராமபிரானிடம் பக்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால்
935) நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் அருளிய பாசுரங்களின் பெயர்?
பெருமாள் திருமொழி
936) குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் அமைந்துள்ள பாசுரங்கள் எத்தனை?
நூற்றைந்து பாடல்கள் – 105
937) குலசேகர ஆழ்வார் எந்த மொழிகளில் வல்லவர்?
வடமொழி & தென்மொழி
938) குலசேகரர் தமிழில் எழுதிய நூல்?
பெருமாள் திருமொழி
939) குலசேகரர் வடமொழியில் எழுதிய எழுதிய நூல்?
முகுந்தமாலை
940) திருவரங்கத்தில் மூன்றாவது மதிலை கட்டியவர்?
குலசேகர ஆழ்வார் (அதனால் குலசேகரன் வீதி என பெயரிடப்பட்டுள்ளது)
941) குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்?
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
942) திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்டு போற்றும் சமயம்?
வைணவம்
943) தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் என அழைக்கப்படுவது?
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
944) நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடிய “பெருமாள் திருமொழி” அமைந்துள்ள பகுதி?
முதல் ஆயிரத்தில் உள்ளது (105 பாசுரங்கள்)
945) இலிங்கிச் செட்டி தெரு அமைந்துள்ள ஊர்?
சென்னை
946) சென்னை இலிங்கிச் செட்டித் தெருவில் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – என்னும் பாடலை பாடி அதற்கு நெடுநேரம் பொருள் கூறிய ஒன்பது வயது சிறுவன்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
947) சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவர வள்ளலார் அமைத்த பாதை?
சமசர சுத்த சன்மார்க்கப்பாதை
948) எந்த நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
949) பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
950) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
மருதூர் – சிதம்பரம் வட்டம் – கடலூர் மாவட்டம்
951) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த தேதி?
05.10.1823
952) வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமைய்யா & சின்னம்மை
953) இராமைய்யா சின்னம்மைக்கு இராமலிங்க அடிகளார் எத்தனையாவது மகவாக பிறந்தார்?
ஐந்தாவது மகவு
954) இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிறித்த குழந்தை?
இராமலிங்க அடிகளார்
955) தில்லை ஆலய அந்தணர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை எவ்வாறு பாராட்டினார்?
இறையருள் பெற்ற திருக்குழந்தை
956) இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
வள்ளலார்
957) அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த – என்று பாடியவர்?
வள்ளலார்
958) இராமலிங்கர் பிறந்து எத்தனையாவது மாதத்தில் தன் தந்தையார் மறைந்தார்?
பிறந்த ஆறாவது திங்களில்
959) இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரை தம் அண்ணன் யாரிடம் அனுப்பிவைத்தார்?
சபாபதி ஆசிரியர்
960) இராமலிங்க அடிகளார் எத்தனை வயதில் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?
ஒன்பது வயதில்
961) திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்?
திகம்பர சாமியார்
962) தெருவில் செல்லும் மனிதர்களை “அதோ ஆடு போகிகிறது, அதோ மாடு போகிகிறது, அதோ நரி போகிறது” என்று அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறியவர்?
திகம்பர சாமியார்
963) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று திகம்பர சாமியார் யாரை கூறினார்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
964) தருமமிகு சென்னையில் உள்ளா கந்தகோட்டத்து இறைவனை வணங்கி மனமுருகப் பாடியவர்?
இராமலிங்க அடிகளார்
965) இராமலிங்க அடிகளார் சென்னை கந்தகோட்டத்து இறைவனை பாடிய பாடல்களின் தொகுப்பு?
தெய்வமணிமாலை
966) ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் – என்று படியவர்?
இராமலிங்க அடிகளார்
967) உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – என்று பாடியவர்?
இராமலிங்க அடிகளார்
968) கற்போரை மனமுருகச் செய்யும் பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்
969) திருவொற்றியூர் சிவபெருமான்மீது இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
எழுத்தறியும் பெருமான் மாலை
970) வடிவுடை மாணிக்கமாலை – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
971) பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின்மீதும் பாடல்களை பாடியவர்?
அருட்பிரகாச வள்ளலார்
972) எளிய இனிய பாடல்கள் மற்றும் கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்து நிறைந்த பாடல்கள் யாருடையது?
திருவருட் பிரகாச வள்ளலார்
973) மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேறுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் பதைத்தவர்?
திருவருட் பிரகாச வள்ளலார்
974) ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பியவர்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
975) ஒருத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளனர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் – என்று பாடியவர்?
வள்ளலார் இமாலிங்க அடிகள்
976) சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் – என்றவர்?
இராலிங்க அடிகளார்
977) வள்ளலார் அவர்கள் சிறுபிள்ளை விளையாட்டு என்று எதை இகழ்கிறார்?
சாதியையும் மதத்தையும்
978) ஆணும் பெண்ணும் சமம் என்று அன்றே உரைத்தவர்?
இரமலிங்க அடிகளார்
979) எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி – என்று பாடியவர்?
வள்ளலார்
980) மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்றும் மன்பதைக்கு உணர்த்தியவர்?
வள்ளலார்
981) பேரின்ப வீட்டின் திறவுகோல் – எது என்று வள்ளலார் கூறுகிறார்?
உயிரிரக்கம்
982) கடவுளின் பெயரால் உயிர்கொலை செய்தவனை அறவே வெறுத்தவர்?
வள்ளலார்
983) பலிகொள்ளும் சிறுத்தெய்வக் கோயிலைக் கண்டு நடுங்கியவர்?
வள்ளலார்
984) போரில்லா உலகினை படைக்க விழைந்தவர்?
வள்ளலார்
985) மண்ணுலகத்திலே உயிர்கள்படும் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் வள்ளலார் பாடிய பாடல்?
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
986) அருட்பெருஞ்ஜோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்கு கருவி எது என வள்ளலார் கூறுகிறார்?
தனிப்பெருங்கருணை
987) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட இடம்?
வடலூர்
988) சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் நோக்கம்?
1) சாதி, மத, சமய, இன வேறுபாடு கூடாது
2) எவ்வுயிரையும் கொல்லலாகாது
3) புலால் புசித்தல் கூடாது
4) எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்
5) ஏழை மக்களின் பசியை போக்குதல் வேண்டும்
6) உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும்
989) அருட்கருணை நிறைந்த பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்
990) திருவருட்பா – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார்
991) திருவருட்பா எத்தனை தொகுதிகளை கொண்ட நூல்?
ஆறு தொகுதிகள்
992) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தவர்?
வள்ளலார் இராமலிங்கர்
993) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்ற வடலூரில் வள்ளலார் அமைத்த சபை?
சத்திய ஞானசபை
994) மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தியவர்?
வள்ளலார்
995) புதுநெறி கண்ட புலவர் யார்? அவ்வாறு போற்றியவர் யார்?
வள்ளலார் – போற்றியவர் பாரதியார் (சோதி தரிசனப் புதுமையை புகுத்தியதால்)
996) தமிழ் மொழியே இறவாத நிலை தரும் – என்று கருதியவர்?
வள்ளலார்
997) உலகெலாம் உய்ய உயரிய நெறி கண்டவர்?
வள்ளலார்
998) வள்ளலார் இறவாநிலை எய்திய நாள்?
தைப்பூசத் திருநாள் – 1874 ஆம் ஆண்டு
999) வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் யாவை?
1) தாய் தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
2) குருவை வணங்கக் கூசி நிற்காதே
3) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
4) மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
5) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
6) பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
7) ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
8) பசித்தோர் முகத்தை பாராதிராதே
9) இரப்போர்க்குப் பிச்சையில்லை என்னாதே
10) தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தாதே

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One